இவர்களுக்கு அனுமதி இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்க தகுதியான சீனர்கள் முதலில் மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்து அங்கிருந்து அவர்கள் இந்தியா வருகிறார்கள். 

மேலும், வேறு நாடுகளில் வசிக்கும்  சீனர்கள் வேலை மற்றும் வணிகத்திற்காக அங்கிருந்து இந்தியா வருகின்றனர். கடந்த வார இறுதியில் இந்தியா மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சீனா நாட்டினரை இந்தியாவுக்கு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டிருந்த நிலையில், சுற்றுலா விசாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், வெளிநாட்டவர்கள் இங்கு வேலை மற்றும் சுற்றுலா அல்லாத விசாக்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தியாவுக்கு வரும் சீன நாட்டினர் பெரும்பாலானவர்களுக்கு ஐரோப்பியாவில் உள்ள நாடுகளிலிருந்து வருகிறார்கள். இந்நிலையில், சீனாவிலிருந்து இந்தியாவுக்கு யாரையும் அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசு விமான நிறுவனத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

denial of entry to india form china


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->