#Breaking: அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், 50 விழுக்காடு இடங்களை அரசு மருத்துவர்களுக்கு வழங்கலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இந்த தீர்ப்பின் படி, அரசு மருத்துவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் இட ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, " நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை " என தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக உயர்நீதிமன்றம் நடப்பாண்டில் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீட்டுக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Supreme Court Cancel Chennai High Court Order about Govt Doctors Higher Education Reservation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->