டெல்லி: செங்கோட்டை கார் வெடிப்பு: 9 பேர் பலி...?! பயங்கரவாதச் சதியா?!
Delhi Red Port Car Blast
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் இன்று (நவ. 10) மாலை 6.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்தபோது, சிறிது நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டு, வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். வெடித்துச் சிதறிய கார் அருகே இருந்த மேலும் சில வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்ததாகத் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். தற்போதுவரை இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் செங்கோட்டை போன்ற முக்கியமான மற்றும் ராணுவ முகாம்கள் நிறைந்த பகுதியில் நடந்ததால், இதில் பயங்கரவாதச் சதித்திட்டம் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கார் யாருக்குச் சொந்தமானது, கார் அங்கு ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.