டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு: 13 பேர் பலி, 24 க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
Delhi Red Fort blast
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இன்று (நவ. 10) மாலை 6.50 மணியளவில் பயங்கர வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் அருகிலிருந்த சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. முதற்கட்டத் தகவல்களின்படி, இந்தத் துயரச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த டெல்லி காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் தடயங்களைச் சேகரித்து தீவிர ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாதச் சதித்திட்டத்தின் கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.