UPSC Exam : தோல்வியில் துவண்ட ஏட்டய்யாவை.. போராடி ஜெயிக்கவைத்த மனைவியின் நெகிழ்ச்சி செயல்.! - Seithipunal
Seithipunal


டெல்லி காவலர் ஒருவர் தனது மனைவியின் துணையுடன் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று யூ பி எஸ் சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளின் படி 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தகைய நிலையில் டெல்லி சைபர் க்ரைம் பிரிவில் ராம் பஜன் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்த நிலையில் அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

ஏற்கனவே ராம் பஜன் ஏழு முறை யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இருந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும் அவர் தோல்வி அடைந்து கொண்டே இருந்தார். ஆனால் அவர் சளைக்காமல் தேர்வுகளுக்கு முயற்சித்துக் கொண்டே இருந்துள்ளார்.

தற்போது அவர் எட்டாவது முறையாக தேர்வு எழுதி இந்திய அளவில் 667 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்று இருக்கிறார். இது குறித்து பேசிய ராமராஜன் திரும்பத் திரும்ப நான் தோல்வியடைந்த போதும் எனது மனைவி என்னை ஊக்கப்படுத்தினார். வலிமையின் தூணாக என் மனைவி திகழ்கிறார்."என்று கூறியுள்ளார்.

தொடர் முயற்சியால் வெற்றி பெற்ற ராம் பஜனுக்கு காவல்துறை சார்பில் பாராட்டுக்களும் மற்றும் உறவினர்கள் பலரும் வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Police selected in upsc Exam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->