பத்திரிகையாளர் Vs உணவக நிர்வாகம்.. வீடியோக்களை வைத்து சண்டை.! - Seithipunal
Seithipunal


டெல்லியை சார்ந்த பிரபல பத்திரிகையாளர் அனிதா சௌதாரி. இவர் டெல்லி நகரில் செயல்பட்டு வரும் ஆடம்பர உணவகத்திற்கு சென்றிருந்த நிலையில், அவர் புடவை அணிந்து உணவகத்திற்கு வந்த காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறி வீடியோ வெளியிட்டார். 

மேலும், இதுபோன்றதொரு அவமரியாதையை எங்கும் சந்தித்து கிடையாது என்று வேதனை தெரிவிப்பதாக வீடியோவில் தெரிவித்தார். இவரது வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகவே, உணவக நிர்வாகத்திற்கு எதிராக கடும் கண்டனம் குவிந்துள்ளது. 

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த உணவக நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், அனிதா உணவக மேலாளரை அறையும் வீடியோ பதிவாகியுள்ளது. மேலும், உணவகத்திற்கு இருக்கை முன்பதிவு செய்யாமல் வந்த அனிதா சௌதாரி, இருக்கை கேட்டுள்ளார். 

அவரை இரண்டு நிமிடம் காத்திருக்க கூறிய உணவக ஊழியர்கள், அவருக்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர். இதற்குள்ளாக ஆத்திரமடைந்த அனிதா மேலாளரை தாக்கி பிரச்சனை செய்து, புடவை என்ற புதிய பஞ்சாயத்தை உருவாக்கியதும் அம்பலமானது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Journalist Anitha Chowdary Hotel Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->