டெல்லி வன்முறை தொடர்பாக பரபரப்பு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கும், ஆதரவு தெரிவிக்கும் நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது வன்முறையாக மாறியது. இந்த வன்முறை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வன்முறையின் காரணமாக பலியான நபர்களின் எண்ணிக்கை தற்போது வரை 22 ஆக அடுத்தடுத்து உயர்ந்தது.

மேலும், சுமார் 200 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வன்முறை தொடர்பான வழக்கானது டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது, வன்முறையை தூண்டும் விதமாக பேசிய நபர்களை கைது செய்யாதது ஏன்? என்ற கேள்வியை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். 

இந்த விஷயம் தொடர்பாக நீதிபதிகள் பேசிய சமயத்தில், கடந்த 1984 ஆம் வருடத்தில் நடைபெற்ற சம்பவம் போல மற்றொரு சம்பவம் நடைபெற்றுவிடக்கூடாது. பன்முகத்தன்மையை கொண்ட நாட்டில் வன்முறைக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்க கூடாது. இதில் நாம் அனைவரும் கவனத்துடன் செயல்பட வேண்டும். வன்முறையை தூங்கும் விதத்தில் பேசிய நபர்களை கைது செய்யாதது ஏன்..

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் சென்று வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் தருணம் இது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்ய அவசர உதவி எண் மற்றும் அவசர ஊர்தி சேவை போன்றவற்றை ஏற்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உளவு அதிகாரி இறப்பு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi high court judge raise question about Delhi violence


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->