மத்திய அரசு வாபஸ் பெறாமல், நாங்களும் வாபஸ் பெறமாட்டோம் - விவசாய சங்க தலைவர் உறுதி.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் மாநிலங்களை சார்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டும் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று விவசாய சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டத்தை திரும்ப பெற எண்ணம் இல்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், வரும் 26 ஆம் தேதி ஒரு இலட்சம் டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ள நிலையில், டெல்லியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் விவசாயிகளை சந்தித்த விவசாயிகள் சங்க தலைவர் ஜோதிந்தார் உக்ரஹான், " வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையில் போராட்டம் தொடரும். 

எந்த விதமான பரிந்துரைகள் மற்றும் நிபந்தனையையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாளையை பேச்சுவார்த்தையில் மத்திய அரசிடம் மீண்டும் எங்களின் கோரிக்கையை தெரிவிப்போம் என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Farmer Protest Kisan Comity Leader Pressmeet 21 Jan 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->