நிர்பயா வழக்கில் கைவிரித்த நீதிமன்றம்.. இறுதி நேரத்தில் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற இளம் பெண்ணை ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 

நிர்பயாவை படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு சிறுவன் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றம் ஆறு பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அந்த சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

மீதமிருந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையிலையே தற்கொலை செய்து கொண்டான். மற்ற நான்கு குற்றவாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை குறைக்க கோரி உச்சநீதிமன்றத்திலும் டெல்லி ஆளுநரிடத்திலும் முறையிட்டனர். ஆனால் அவர்களின் கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார். 

தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுவை குற்றவாளிகள் வினய் சர்மா, முகேஷ் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது தூக்கு தண்டனைக்கு தடை கோரும் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை உறுதியானது.

குற்றவாளிகள் டெல்லி அரசிடம் அனுப்பிய கருணை மனுக்கள் கடந்த இரண்டு வருடமாக நிலுவையில் உள்ளதால் தற்போது இவர்களுக்கு தூக்கிடும் தேதி மாற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிமன்றத்தின் கேள்விக்கும் டெல்லி அரசு குற்றவாளிகளின் கருணை மனு நிலுவையில் உள்ளதால் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற இயலாது என்று தெரிவித்திருந்தது.

நிர்பயா பாலியல் பலாத்காரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வருக்கும் வரும் பிப்ரவரி மாதத்தின் 1 ஆம் தேதியன்று தூக்கு தள்ளி வைத்து அறிவிக்கப்பட்டது. மேலும், இவர்கள் நால்வருக்கும் காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக முகேஷ் குமார் சிங்கின் சீராய்வு மனு தள்ளுபடி, கருணை மனு நிராகரிப்புக்கு எதிரான மனு என குற்றவாளிகள் தரப்பில் தொடுக்கப்பட்ட அனைத்தும் அடுத்தடுத்து தள்ளுபடி ஆனதால் முகேஷ் சிங் தூக்கிலிடப்படுவது உறுதியானது.

இந்த நிலையில், இந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் நால்வரையும் நாளை தூக்கிலிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றம் நடைபெற்ற போது தான் சிறுவனாக இருந்ததை கருத்தில் கொள்ளாமல் தனக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் தனது தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி  பவன் குப்தா மனு தாக்கல் செய்திருந்தான்.

நிர்பயா குற்றவாளி பவன் குப்தாவின் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இதையடுத்து குற்றவாளிகள் 4 பேருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளை காலை 6 மணிக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியான நிலையில், மறு உத்தரவு வரும் வரை நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க இடைக்காலத்தடை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi court order about stop death sign tomorrow date


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->