டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,00,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 1,038 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,24,29,564 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,73,123 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் கொரோனாவை கட்டுக்குள் வைக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில், டெல்லியில் வார இறுதி நாட்களில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வாரத்தின் இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும். கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுக்குள் வைக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi CM Aravind Kejriwal Announce Delhi State Week End Days Lockdown 15 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->