ஆர்எஸ்எஸ் தலைவரை புகழ்ந்த அகில இந்திய இமாம்கள் அமைப்பு தலைவருக்கு கொலை மிரட்டல்! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் இருந்து கொலை மிரட்டல் விடுவதாக காவல் நிலையத்தில் புகார்!

இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுக்கான அமைப்பாக இந்திய இமாம் அமைப்பு செயல்படுகிறது. உலகின் மிகப்பெரிய இஸ்லாம் அமைப்பாக இந்திய இமாமை அமைப்பு கருதப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக உமர் அகமது இலியாஸ் இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள அந்த அமைப்பின் மசூதிக்கு சென்றிருந்தார். இரு தரப்பினரும் சுமார் ஒரு மணி நேரம் மசூதியில் யாரையும் அனுமதிக்காமல் ஆலோசனை நடத்தினர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அகில இந்திய இமாம் அமைப்பின் அலுவலகத்திற்கு வருகை தந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் நமது நாட்டின் தந்தை என பேட்டியளித்து இருந்தார்.

இந்த நிலையில் அன்று மாலையில் இருந்து இமாமிற்கு கொலை மிரட்டல் வர துவங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் இமாம் இலியாஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் "ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்தித்த நாள் முதல் எனது தலையை துண்டிக்க இருப்பதாக பலர் மிரட்டல் விடுகின்றனர். முதல் மிரட்டல் கொல்கத்தாவில் இருந்து வாட்ஸ் அப் எண்ணில் வந்தது. இதே வகையில் பாகிஸ்தான், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் லண்டனில் இருந்து மிரட்டல்கள் வருகின்றன. சிலர் எங்கள் வீடு மற்றும் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகின்றனர்" என புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் மீது விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் கொலை மிரட்டல் பின்னணியில் வெளிநாட்டின் சதி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கை விரைவில் டெல்லியில் உள்ள சிறப்பு போலீஸ் பிரிவுக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இமாம்களின் தலைவரான உமர் இஸ்மாயில் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பை மேலும் பலப்படுத்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Death threat to All India Imams Organization leader for praising RSS leader


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->