அப்பா.. எங்க போற.. கொரோனா வருது.. வெளியலாம் போக கூடாது.. செல்ல குழந்தையின் சுட்டித்தனமான கண்டிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கரோனா வைரஸின் தொற்றானது தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க இந்தியா முழுவதிலும் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வீட்டில் இருந்து வெளியே செல்லும் தந்தையை மகள் பாசத்தால் தடுத்து நிறுத்தும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள தந்தை வீட்டினை விட்டு வெளியேற முயற்சி செய்கிறார். இவருக்கு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இந்த செல்ல குழந்தை தந்தையை வெளியே செல்ல விடாது, வாயில் கதவுக்கு அருகே சென்று நின்று கொண்டு வெளியே செல்ல கூடாது, வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்று கூறுகிறார். 

மேலும், தனது மழலைமொழியில் தந்தையை அன்போடும், கோபத்தோடும் முகபாவனையை மாற்றி மாற்றி எச்சரித்துள்ளார். இந்த வீடியோ அங்குள்ள பகுதியில் வைரலாகவே, சிறுமியின் வீடியோ காட்சியை அம்மாநில முதல்வர் பெமா காண்டு (Pema Khandu) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daughter product father to go outside due to corona virus


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->