மதுபான பாரில் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் ஆபாச நடனம்.!  - Seithipunal
Seithipunal


போரிவிலியில் மதுபான பாரில் ஆபாச நடனம் நடத்தியது குறித்து போலீசார் பார் ஊழியர்கள் உள்ளிட்ட 61 பேரை கைது செய்துள்ளார்கள்.

மும்பை போரிவிலியில் சர்வக் என்ற மதுபான பார் ஒன்று உள்ளது. இந்த பாரில் ஆபாச நடனங்கள் நடந்து வருகிறது என்று போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

அதன் அடிப்படியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு அந்த பாரில் சென்று அதிரடி சோதனை நடத்தியுள்ளார்கள்.

இந்த சோதனையின் போது, அங்கு அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் 4 பேர் ஆபாசமாக நடனமாடி கொண்டிருந்தார்கள். இதை பார்த்த போலீசார் அழகிகள் 4 பேரையும் மீட்டனர்.

இதை தொடர்ந்து போலீசார் அவர்களுடன் நடனத்தில் ஈடுபட்டிருந்த வாடிக்கையாளர்கள் 29 பேர் மற்றும் பார் ஊழியர்கள் 32 பேரை அதிரடியாக கைது செய்தார்கள்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் 61 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dance in mumbai tasmac bar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->