சராசரியை விட எகிறும் புயல்களின் எண்ணிக்கை.! மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் சராசரி அளவைக் காட்டிலும் எப்போதும் இல்லாத அளவு 2019ஆம் ஆண்டில் புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு கூறியுள்ளது. மத்திய புவியியல் அமைச்சகம் இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு நாடு முழுவதும் 5 அதிதீவிர புயல்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளது. இது எப்போதும் நடைபெறும் சராசரி அளவைக் காட்டிலும் அதிகமானதாகும்.

1891 முதல் 2017 வரையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆண்டுக்கு சராசரியாக அரபிக்கடலில் ஒரு புயலும் மற்றும் வங்காள விரிகுடாவில் 4 புயல்களும் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் அமைச்சகம் கூறியுள்ளது.

அரபிக் கடலில் வருடத்திற்கு சராசரியாக ஒரு புயல் ஏற்படும் எனும் நிலையில் கடந்த ஆண்டு மட்டும் 5 புயல்கள் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இவை தீவிரமான புயல்களாக இருந்ததாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அரசு அளித்த தகவலின்படி அரபிக் கடலில் 2017ஆம் ஆண்டு அதிதீவிரமான அளவில் ஒரு புயலும், 2018ஆம் ஆண்டு 3 புயல்களும் மற்றும் 2019ஆம் ஆண்டில் 5 புயல்களும் ஏற்பட்டு இருக்கின்றது. அதுபோல வங்காள விரிகுடாவில் 2017ஆம் ஆண்டில் அதிதீவிரமாக 2 புயல்களும், 2018ஆம் ஆண்டில் 4 புயல்களும் மற்றும் 2019ஆம் ஆண்டில் 3 புயல்களும் ஏற்பட்டு இருக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cyclone was increased in india


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->