ஜூலை 2021 வரை ஊரடங்கு விதிமுறைகள் நீட்டிப்பு.. அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 697,836ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 424,891ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19,700ஆக  உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. ஆகையால், பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்கி வருகிறது. 

இந்நிலையில் கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகளை ஜூலை 2021 ஆம் ஆண்டு வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகளை ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த ஓராண்டிற்கு மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. அரசு அனுமதி பெற்று நடத்தும் சமூக கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை  கடைபிடிக்க வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. இறப்பு போன்ற தூக்க நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை. அடுத்த ஓராண்டிற்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

அடுத்த ஓராண்டிற்கு மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். வணிகம் செய்யும் இடங்களில் மக்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும். பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம். அடுத்த ஓராண்டில் எந்த விதிமான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதியில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

curfew extends until july 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->