கர்நாடகாவில் போடப்பட்ட அதிரடி தடை., அதிர்ச்சியில் மாநில மக்கள்.! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, சிக்கிம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாகவும், காற்று மாசு அதிகரிப்பு காரணமாகவும் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி, தீபாவளியைக் கொண்டாடும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், அதே சமயத்தில் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டும் தீபாவளி அன்று காலை ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.

அது முதல் தற்போது வரை தீபாவளி அன்று காலை - மாலை தலா ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடைவிதித்து வருகின்றன.

ராஜஸ்தான், மேற்கு வங்காளம், ஒடிசா, சிக்கிம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய தடை விதிப்பதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

முதல்வர் எடியூரப்பா வெளியிட்ட அந்த அறிவிப்பில், "கர்நாடக மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளோம். இது குறித்த அரசு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

crakers ban in karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->