ஒரு வாரத்தில் ரூ.1.47 இலட்சம் கோடி.. தொலைத்தொடர்பு நிறுவனங்களை கிடுக்குபிடி பிடித்த நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய கூறி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கொடுத்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து இருக்கின்றது.

இதன் காரணமாக ஒரு வார காலத்திற்குள் ரூபாய் 1.47 லட்சம் கோடியை கொடுக்க வேண்டிய நிலை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்ட நிறுவனங்கள் தங்களது சரி செய்யப்பட்ட நிகர வருவாயில் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை வருடத்திற்கு உரிம கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். 

இதில், அலைக்கற்றை பயன்பாடு, கட்டணம், சொத்து வருமானம் ஆகியவையும் அடங்கும். இன்னிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல தங்களுடைய வருவாயை குறைத்து காட்டியதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில், "ஏர்டெல், வோடபோன் மற்றும் டாடா டெலி சர்வீசஸ் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு 1.47 லட்சம் கோடியை செலுத்த வேண்டும்." என்று உத்தரவிட்டது.

மேலும், இதற்கு ஜனவரி 23ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும்படி தொலைதொடர்பு நிறுவனங்கள் மனு தாக்கல் செய்தது. 

இதனை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது. பின்னர், இந்த சீராய்வு மனுவில் எந்த ஒரு தகுதியும் இல்லை என்று கூறி அந்த மனுவை தற்பொழுது தள்ளுபடி செய்தது. இதன் காரணமாக தொலைதொடர்பு நிறுவனங்கள் 1.47 லட்சம் கோடியை மத்திய அரசுக்கு ஒரே வாரத்தில் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

court order network company to return loan amount


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->