சண்டையில் ஏற்பட்ட பிரச்சனை.. அனாதையான குழந்தைகள்.. கண்ணீரில் உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் அன்னூர் கிராமத்தை சார்ந்தவர் பூர்ணிமா (வயது 27). இவரது கணவர் கெம்பண்ணா (வயது 37). இவர் விவசாயியாக பணி செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.  இவர்களுக்கு 3 வயதுடைய குழந்தை உள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் அங்குள்ள தேமஹள்ளி கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

கெம்பண்ணா அங்குள்ள கிராம பகுதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த நிலையில், கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவிற்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் போர்ணிமா அவ்வப்போது தனது தாயாரின் இல்லத்திற்கு குழந்தையுடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். 

இதனைப்போன்று சமீபத்தில் ஏற்பட்ட தகராறில் பூர்ணிமா தனது தாயாரின் இல்லத்திற்கு செல்லவே, கெம்பண்ணா நேற்று தனது மாமியாரின் இல்லத்திற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். இதனையடுத்து சமாதானம் அடைந்த பூர்ணிமா குழந்தையை அழைத்து கணவருடன் தேமஹள்ளி கிராமத்திற்கு சென்றுள்ளனர். 

இவர்கள் இருவரும் கிராமத்திற்கு சென்ற நிலையில், பூர்ணிமா இயற்கை உபாதையை கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து வாகனத்தை ஓரமாக நிறுத்தவே, பூர்ணிமா திடீரென அங்கு ஓடும் கபினி ஆற்றில் குதித்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கெம்பண்ணா பூர்ணிமாவை காப்பாற்றும் முயற்சியில் இறங்கவே, இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

குழந்தை மோட்டார் சைக்கிளில் அமர்ந்து அழுதுகொண்டு இருக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் குழந்தையிடம் விசாரித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குழந்தையை பூர்ணிமாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple died Karnataka police investigation going on


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->