24 மணிநேரத்தில் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா.. 2 இலட்சத்தை நெருங்கும் இந்தியா.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது.

தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர். 

இந்தியாவிலும் கரோனா வைரஸின் தாக்கமானது நாடுளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையானது 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. 5,164 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 86,984 பேர் பூரண நலனுடன் இல்லத்திற்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தை பொறுத்த வரையில் 8,380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 193 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus positive will touch shortly 2 lakh India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->