கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது.! பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.!! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை விளக்கும் வகையில் வீடியோ ஒன்றை பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர்களை காக்க கூடியது என குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona virus awareness video for pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->