கொரோனா போராட்டத்தில் இந்தியா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது - பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிட்ஷீல்டு தடுப்பூசி பொது விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முதற்கட்ட சோதனைகளும் நாடு முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதன்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, " கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் 3 கோடி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 

அடுத்தடுத்த சில மாதங்களில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்ட கொரோனா தடுப்பூசி போடும் செயலை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். 3 கோடி முன்களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona Vaccine Distribution Modi Speech CM Meeting 11 Jan 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->