ரூ. 49-க்கு கொரோனா மாத்திரை.. இந்திய நிறுவனம் உற்சாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இதுவரை மருந்து விற்பனைக்கு வரவில்லை. 

தற்போது, கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மருந்து விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த வகையில் ஜப்பானில் இன்புளூவன்சாவுக்கு வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தாக பேவிபிராவிர் மாத்திரை தரப்படுகிறது. இந்த மாத்திரை வைரஸ் நகலெடுப்பை தடுக்கிறது. ஆர்.என்.ஏ. பாலிமரேசை தேர்ந்தெடுப்பதை தடுக்கிறது. இந்த மாத்திரை கொரோனா வைரஸ் தொற்றின் லேசான மற்றும் மிதமான பாதிப்பில் உள்ளவர்களுக்கு தர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், மும்பையை தலைமையிடமாகக் கொண்ட செயல்படுகிற பன்னாட்டு மருந்து நிறுவனம் லூபின், பேவிபிராவிர் மாத்திரையை கோவிஹால்ட் என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்க அனுமதி அளித்துள்ளனர். இந்த மாத்திரை ஒன்று ரூபாய் 49 என்கின்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாதிரி 200 மில்லிகிராம் அளவில் 10 மாத்திரைகள் கொண்ட அட்டையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, லூபின் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், காசநோய் போன்ற பரவலான சமூக நோய்களை நிர்வகிப்பதில், அதன் நிபுணத்துவத்தை இந்தியா முழுவதும் உள்ள நோயாளிகளை  விரைவாக சென்றடையும். இதன் வலுவான வினியோக வலையமைப்பு மற்றும் களப்பணி மூலம் மாத்திரை கிடைப்பதை உறுதி செய்யவும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona tablet corona tablet for 49 rupees


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->