பெயர் குழப்பத்தினால், குணமடைந்தவருக்கு பதில் கொரோனா நோயாளி டிஸ்சார்ஜ்.! மக்கள் பீதி..!  - Seithipunal
Seithipunal


அஸ்ஸாம் மாநிலம் தராங்க் மாவட்டத்தில் உள்ள மங்கல்தாய் சிவில் மருத்துவமனை அஸ்ஸாம் மாநில அரசால் நடத்தப்படுகின்றது. அங்கே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கடந்த புதன் கிழமை, கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு பின் சிகிச்சையில் குணமடைந்த கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

எனவே, கடந்த புதன்கிழமை இரவு 7 மணிக்கு ஹமித் அலி என்பவர் உட்பட 6 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததால் அவர்களை  வீட்டிற்கு அனுப்பி இருக்கின்றது. ஆனால், ஹமித் அலிக்கு மற்றொரு கொரோனா நோயாளியான ஹனிஃப் அலியை வீட்டிற்கு அனுப்பி இருகின்றனர். ஹனிஃப் அலியும் தான் குணமடைந்துவிட்டதாக நினைத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஹனிஃப் அலி சென்ற சிலமணி நேரம் கழித்துதான் ஹமித் அலிக்கு பதிலாக ஹனிஃப் அலியை வீட்டிற்கு அனுப்பியதை மருத்துவமனை நிர்வாகம் கண்டறிந்துள்ளது. உடனே அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் தவறுதலாக டிஸ்சர்ஜ் செய்யப்பட்ட ஹனிஃப் அலியை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்,  ஹனிஃப் அலியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினருக்கும் தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக தொற்று பரவும் நிலையில், மருத்துவமனையில் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்று அலட்சியமாக இருக்கக்கூடாது என அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona patient discharge by hospital in assam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->