கொரோனா நோயாளியின் உடலை தின்ற தெருநாய்கள்.! அச்சத்தில் உறையவைத்த பகீர் தகவல்.!  - Seithipunal
Seithipunal


கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி கொரோனா தொற்றால், உயிரிழந்த 44 வயதுடைய நபரின் மரணம் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்துகின்றன. தெலுங்கானாவில் நோயால் இறந்தவரின் உடலை அதிகாரிகள் அப்படியே போட்டு விட்டதாகவும், அது பாதி எரிந்த நிலையில் அருகில் கிடந்த தெரு நாய்களால் சாப்பிட்டதாகவும், ஊடகங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதற்கிடையில், இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் நோயாளியின் குடும்ப உறுப்பினர்களும் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். உடல் பாதி எரிக்கப்படவில்லை என்றும், நாய்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது விலங்கின் உடல் என்றும் தெரிவித்தனர்.

கொரோனா நோயாளி ஆபலாபத்தில் இருக்கும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது, உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து, ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அப்பொழுது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் ஆக்சிஜன் சிலிண்டர் காலியான காரணத்தால் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், அவரது உடல் பாதி ஏரிக்கப்பட்ட நிலையில் நாய்களை சாப்பிடபட்டதாக கூறும் விஷயம் பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CORONA PATIENT BODY ATE BY DOG


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->