கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க... தனிமனித பாதுகாப்பு மற்றும் தடுப்புமுறை..!! - Seithipunal
Seithipunal


தற்போது உலக மக்கள் அனைவரும் உச்சரிக்கும் ஓர் வார்த்தை கொரோனா. கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தலில் ஆழ்த்தி இருக்கிறது. இது சீனாவில் தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. சீனாவில் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, தைவான், ஈரான், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இப்பொழுது இந்தியாவிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று இருக்காமல் வரும்முன் காப்பதே சாலச்சிறந்தது.

உயிரை பறிக்க, உலா வரும் கொரோனா வைரஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டியது.

சுத்தம்

சுகாதாரம்

பாதுகாப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தனிமனித உறுதிமொழி குறித்து ஒரு அறிக்கையை தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்படாமல் தனிமனிதனாகிய நான், எனது பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய உறுதிமொழி :

நான் பொது போக்குவரத்தில் பயணம் செய்யமாட்டேன்.

நான் எந்த பொது நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் கலந்து கொள்ளமாட்டேன்.

நான் திரையரங்களுக்கோ, உணவகங்களுக்கோ செல்லமாட்டேன்.

நான் உணவகங்களிலிருந்து உணவினை வீட்டிற்கு வரவழைக்கமாட்டேன்.

நான் உடற்பயிற்சி கூடங்களுக்கோ, நீச்சல் குளத்திற்கோ செல்லமாட்டேன்.

நான் மற்றவர்களுக்கு வாழ்த்து சொல்லும்போது, இரு கைகளை கூப்பி வணங்குவேன்.

நான் முகத்தை தொடுவதற்கு முன் கைகளை நன்கு கழுவுவேன்.

நான் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தலின்படி, ஒரு நாளைக்கு 10 முதல் 15 முறை, 20 நொடிகளுக்கு கைகளை நன்கு கழுவுவேன்.

நான் பொது இடங்களில் கைப்படும் இடங்களை தொடுவதை தவிர்ப்பேன்.

நான் பொது இடங்களுக்கு அவசியமில்லாத காரணங்களுக்கு செல்வதை தவிர்ப்பேன்.

இச்சூழ்நிலையில் பொது மக்கள் நலமுடன் இருக்க தன் சுத்தம் பேணுதல் முறைகளை கையாள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

இந்த பாதுகாப்பு உறுதிமொழிகளை பின்பற்றி நம்மையும், நம் குடும்பத்தாரையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்போம்.

கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி?

உங்கள் கைகளை குறைந்தது 20 நொடிகள் கழுவ வேண்டும். சோப்பு மற்றும் நீரைக் கொண்டு நன்றாக கழுவுங்கள்.

உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாய் இவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்த்திடுங்கள்.

இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ பேப்பர்களை பயன்படுத்துங்கள்.

கைக்குட்டைகளை பயன்படுத்தினால் மற்றவர்கள் அதனை தொடாமல் நீங்களே பாதுகாப்பான முறையில் றுயளா செய்திடுங்கள்.

கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பர் இல்லை என்றால் உங்கள் முழங்கை முட்டுப்பகுதியை பயன்படுத்தி இருமுங்கள்.

கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், ஸ்விட்ச் போன்று பொதுவாக மக்கள் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்திடுங்கள்.

பேருந்து பயணங்கள், பூங்காக்கள், கோவில்கள், விசேஷங்கள் போன்ற பொதுவாக மக்கள் பயன்படுத்தும் இடங்களை தவிர்த்திடுங்கள்.

கொரோனா வைரஸின் தாக்கத்தை இத்தருணத்தில் உணர்ந்து செயல்படுவோம்.

இப்பதிவை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஷேர் செய்து அவர்களையும் விழிப்புணர்வுடன் இருக்கச் செய்யுங்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona awareness 7


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->