கொரோனா 3ம் அலை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிய கேரள அரசு.!! - Seithipunal
Seithipunal


கொரோனா மூன்றாவது அலை இன்னும் சில மாதங்களில் தாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா மூன்றாம் அலை பரவல் 18 வயதுக்கு கீழே இருக்கும் சிறார்களை தாக்க வாய்ப்புள்ளது. இதனால் அதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 

மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முன்கூட்டியே சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனையிலும் குறைந்தது 100 சிறந்த சிகிச்சை வசதிகள் கொண்ட படுக்கைகள் ஏற்படுத்த வேண்டும். மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 

மூன்றாவது அலை ஏற்படுமாயின் குழந்தைகளை அதிகளவு தாக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுவதால், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பொருட்டு நாம் தயாராக இருக்க வேண்டும். மருத்துவமனை கட்டமைப்புகள் மற்றும் படுக்கை வசதிகள் மேம்மபடுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

இந்நிலையில், கொரோனா 3ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கேரள அரசு இறங்கியுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலக்கோட்டில் செயல்பாட்டில் இல்லாத கோக்க கோலா ஆலையை ரூபாய் 1.1 கோடி செலவில் குரானா சிகிச்சை மையம் ஆக மாற்றி அமைத்துள்ளதால் கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona 3rd wave precaution in kerala


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->