காந்தியை கொன்ற நபர் எந்த கொள்கை கொண்டவர் என்று தெரியும்! மேற்கு வங்கத்தில் மகிசாசூரன் சிலையால் சர்ச்சை! - Seithipunal
Seithipunal


தற்செயலாக நடந்த விஷயம்! யார் மனதையும் புண்படுத்த செய்யவில்லை!

அகில இந்திய இந்து மகாசபா அமைப்பினர் சார்பில் தென்மேற்கு கொல்கத்தாவில் உள்ள ரூபி கிராசிங் பகுதியில் துர்கா பூஜை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசூரன் பொம்மை ஒன்றை துர்கா தேவியின் சூலாயுதத்தால் வதம் செய்யப்படுவது போல் அமைக்கப்பட்டிருந்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் மகாத்மா காந்தியின் பொம்மை அகற்றிவிட்டு மகிசாசூரன் பொம்மை வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து இந்திய இந்து மகாசபா அமைப்பினர் அளித்த விளக்கத்தில் "மகாத்மா காந்தியின் உருவத்தை போல் மகிசாசூரன் பொம்மை வடிவமைக்கப்பட்டது தற்செயலாக நடந்தது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை. யார் மனதையும் புண்படுத்த இவ்வாறு செய்யப்படவில்லை. இது எதேச்சையாக நடந்த செயல்" என அந்த அமைப்பினர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "இது தேசத் தந்தையை அவமதிக்கும் செயல். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அவமதிக்கும் செயல். இப்படிப்பட்ட அவமதிப்பு பற்றி பாஜக என்ன சொல்ல போகிறது? காந்தியை கொன்ற நபர் எந்த கொள்கை கொண்ட முகாமை சேர்ந்தவர் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில் இன்று காந்தி சிலை அவ மதிக்கப்பட்ட செயலால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Controversy has arisen a Mahatma Gandhi doll like Mahisasuran doll


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->