#BREAKING :: ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் அதிர்ச்சி சம்பவம்... காங்கிரஸ் எம்.பி சந்தோக்சிங் சவுத்ரி உயிரிழப்பு...!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவருடைய இந்த நடை பயணம் தற்பொழுது பஞ்சாப் மாநிலம் லூதியானாவை அடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை லூதியானாவில் நடைபெற்ற ராகுல் காந்தியின் நடைபயணத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக்சிங் சவுத்ரி கலந்து கொண்டார்.

அப்பொழுது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி கீழே விழுந்தார். பிறகு அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோக்சிங் சவுத்ரி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோக்சிங் சவுத்ரியின் மறைவுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்பி சந்தோக்சிங் சவுத்ரியின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress MP santokhsingh chaudhary passes away


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->