ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கையுடன், போலீசார் விடுத்த புதிய உத்தரவு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்பொழுது ஆன்லைன் மூலம் விருப்பமான உணவு பொருட்களை ஆர்டர் செய்து வீட்டிலேயே வினியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களுக்கு வித்தியாசமான நிறங்களில் தனி சீருடைகள் உள்ளது.

இருப்பினும் உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் என்ற பெயரில் குற்றங்கள் பெருகி கொண்டே போகிறது.

இந்நிலையில் குற்றங்களில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், குற்றங்களை தடுக்கவும் புதுச்சேரி கிழக்கு பகுதி காவலர்கள் சார்பில் ஆன்லைன் மூலம் ஆர்டர் பெற்று உணவு விநியோகிக்கும் ஊழியர்களுக்காக ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியது.

அதில் பேசிய போலீஸ் சூப்பிரண்ட் கூறியதாவது, ஒவ்வொரு தனியார் நிறுவனங்களுக்கும் தனி சீருடை உள்ளது. இருப்பினும் உணவு விநியோகம் செய்யும் அனைவரும் தவறாமல் அடையாள அட்டை அணிய வேண்டும்.

மேலும் உங்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க ஒவ்வொரு நிறுவன அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உங்களுக்கான அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும். அதனை ஊழியர்கள் அனைவரும் தவறாமல்   அணிய வேண்டும். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களை தடுக்க மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிக்கு ஊழியர்கள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

condition for online food delievery man


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->