திடீரென்று இரு பிரிவினர் இடையே வெடித்த மோதல்: 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில்..? ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு - இராணுவத்தின் உதவிகோரும் மாநிலஅரசு..! - Seithipunal
Seithipunal


அசாம் மாநிலத்தில் உள்ள ஹைலகண்டி என்ற நகரில் இருவேறு  தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் சுமார்ப் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு  காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த இந்த மோதலில் காயமடைந்தவர்களில், 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இருவேறு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வன்முறை வெடித்துள்ளது.

இதனால் பாதுகாப்புக்காக ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த மக்கள்  அங்குள்ள பள்ளிவாசல் முன்பாக சாலையில் அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பள்ளிவாசலுக்கு முன்பு அமர்ந்து வழிபாட்டில் ஈடுபட எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட மோதல் தீவிர வன்முறையாக மாறி, பிறகு கலவரமாக வெடித்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நேற்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. கலவரமாக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Communal-Clashes-Erupt-in-Assams-Hailakandi-Prohibitory


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->