அதிரடியாக குறைந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை..! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், மாதத்தின் முதல் தேதியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் நிர்ணயித்து வருகின்றனர். 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், சென்னையில் இன்று முதல், ரூ.2,045-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டு, ரூ.2,009.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று முதல், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் ரூ.1,885க்கு பதிலாக ரூ.25.50 குறைத்து ரூ.1,859க்கு விற்பனை செய்யப்படும். எனினும், வீட்டு உபயோக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை.

மேலும், ஜூலை மாதம் 6-ம் தேதி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை யூனிட்டுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Commercial use cylinder prce decrease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->