சொத்துக்களை விற்று கடனை அடைக்கும் முடிவுக்கு வந்த காபிடே நிறுவனம்!! - Seithipunal
Seithipunal


காபிடே நிறுவனத்தின் அதிபர் வி.ஜே.சித்தார்த்தா கடந்த ஜூலை 31 ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் தற்கொலை செய்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் இதையடுத்து, காபிடே நிறுவனத்தின் மீதான 4 ஆயிரத்து 970 கோடி ரூபாய் கடன் சுமை வெளிச்சத்திற்கு வந்தது. 

4 ஆயிரத்து 970 கோடி ரூபாய் கடன்களை அனைத்தையும் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காபி டே நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். ஏற்கனவே குளோபல் வில்லேஜ் உள்ளிட்ட சொத்துகளை விற்பதற்கு காபிடே நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காஃபிடே மீதான கடன் சுமை கணிசமான அளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளின் கொடுத்த தொல்லையாலும், அளவுக்கு அதிகமான கடன் சுமையாலும் தான் வி.ஜே.சித்தார்த்தா தற்கொலைமுடிவை எடுத்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coffe day asserts sale


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->