பிற மாநிலத்தவர்களும் எங்கள் மொழியை கற்க வேண்டும் - முதல்வர் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா கர்நாடகாவில் வசித்து வரும் பிற மாநிலத்தவர்களும் கன்னட மொழியை கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

1956-ல் மொழி வாரியாக பல மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நேரத்தில் மைசூர் மாநிலத்துடன் கன்னட மக்கள் வாழும் சில பகுதிகளை சேர்த்து கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டது. 

ஒவ்வொறு ஆண்டும் நவம்பர் 1 ஆம் தேதி கர்நாடக மாநிலம் தோன்றியதை நினைவு கூறும் வகையில் “ராஜ்யோத்சவா” என்னும் விழா அரசால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூரில் நடைபெற்ற ராஜ்யோத்சவா என்ற விழாவில் கலந்துகொண்டார்.

அப்போது உரையாற்றிய எடியூரப்பா, “கன்னட மொழியானது வளமிக்க, அழகான, நவீனத்தை உள்வாங்க கூடிய மொழி. எனவே, கன்னட மொழியை பயன்படுத்த யாரும் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்பதே இல்லை” என கூறினார். 

தொடர்ந்து, "வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு குடிவந்தவர்களும் கன்னட மொழியை கற்று கொள்ள வேண்டும். கர்நாடகாவின் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைமுறையை ஏற்று பழக வேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm new announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->