ரஷியாவிடம் கதறும் சீனா.. சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்த இந்தியா.!! - Seithipunal
Seithipunal


இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷிய நாட்டிற்கு பயணம் செய்துள்ள நிலையில், இந்திய - ரஷிய நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சீனாவிற்கு பெரும் வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிற்கு ரஷியா வழங்கவுள்ள ஆயுதத்தை வழங்க கூடாது என மறைமுக கோரிக்கை வைத்துள்ளதாக தெரியவருகிறது. 

மேலும், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்திய - சீன எல்லை பிரச்சனை வலுத்துள்ள நிலையில், சீன தரப்பில் அதிகளவு உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் மட்டும் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் எத்தனை உயிரிழப்புகள் என்பது தொடர்பான தகவல் இல்லை. இதனால் இந்திய - சீன எல்லையில் பதற்றம் ஏற்பட்டு, இரு நாடுகளும் படைகளை குவித்து வந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்காலிக சமாதானம் ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற சூழலில் ரஷிய நாட்டின் 73 ஆம் வருட இரண்டாம் உலக போர் வெற்றி விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷியாவிற்கு சென்றுள்ள நிலையில், ரஷியாவிடம் முன்னதாக மேற்கொள்ளப்பட்டு இருந்த ஆயுத ஒப்பந்தம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும், இந்தியாவிற்கு ஆயுதங்கள் விரைவாக ரஷியாவிடம் இருந்து கிடைக்கப்பெறும் என்றும் ரஷியா உறுதி அளித்துள்ளது.

இதனால் சீனாவிற்கு வெளியே கூற இயலாத கசப்பு ஏற்பட்டுள்ளதும் தெரியவருகிறது. மேலும், இந்த வருடத்தில் ரஷிய அதிபர் புதினை இந்தியாவிற்கு வர இந்திய பிரதமர் மோடியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China try to under play with Russia, but Russia Confidant with India - Russia relationship


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->