இந்தியாவிடம் செம டோஸ் வாங்கிய சீனா.. அமெரிக்கா முன்னிலையில் அசிங்கப்பட்ட சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


இந்திய உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்த சீனாவை, மூக்குடைத்து அனுப்பிய சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும், இந்திய உள்நாட்டு விவாகரத்தில் சீனா அத்துமீறுவதை அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஜம்மு காஷ்மீர் விஷயத்தை மீண்டும் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்புவதற்கு சீனா முயற்சி செய்த நிலையில், ஐ.நாவின் சக உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து ஒத்துழைக்கவில்லை. இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது.

இதைப் போன்று நடந்து கொள்வது சீனாவிற்கு முதல் முறையாக இல்லை என்றாலும், இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை சீனா குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதனை இந்தியா உறுதியாக எதிர்க்கும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு முறையும் இந்திய ஜம்மு-காஷ்மீர் விஷயத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் எடுத்துச் சென்று, இந்திய உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்க சீனா மற்றும் பாக்கிஸ்தான் முயற்சித்த நிலையில், தற்போது பல்பு வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி திரு மூர்த்தி கூறுகையில், " ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான விவகாரமாக இருந்தது. சிம்லா ஒப்பந்தத்தின்படி தீர்வும் காணப்பட்டது. இந்த விஷயம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் உறுப்பு நாடுகளுக்கு தெரியும் " என்று கூறினார். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறும் நிலையில், இந்த விஷயத்தை மீண்டும் சீனா சர்ச்சைக்குள்ளாக்க முயற்சித்தது. இதற்கு நேரமில்லை என்று முதலில் அமெரிக்கா தெரிவித்ததை தொடர்ந்து, உறுப்பு நாடுகளும் இதனையே தெரிவித்ததால் சீனாவிற்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China make problem about Jammu Kashmir In UN, another country reject china voice


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->