மீண்டும் எல்லையில் அத்துமீறும் சீனா.. உஷாராகும் இந்திய இராணுவ வட்டாரங்கள்.! - Seithipunal
Seithipunal


எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், புதிய திட்டத்துடன் இந்திய இராணுவத்திற்கு முன்பாக சீனா தனது தங்களை நிலைநிறுத்திக் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலைப்பாங்கான பகுதியான ரோசங் லா, ரோசின் லா, முகோசிரி பகுதிகளில் 30 முதல் 35 இராணுவ பீரங்கிகளை சீனா நிலை நிறுத்தியுள்ளது. இந்த இடங்கள் இந்திய இராணுவத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்திய நிலைகளை குறிவைத்து செயல்பட சீனா தனது படைகளை நிறுத்தியுள்ளது. 

மேலும், அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள பீரங்கிகள், நவீன ரகத்தைச் சார்ந்த பீரங்கிகள் என்றும் கூறப்படுகிறது. சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை ஏற்பட்டால், நமது ராணுவம் தக்க பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நடத்த பிரச்சனைக்கு பின்னர், சீன செயலிகள் உட்பட பல சீன நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆப்படித்த நிலையில், மக்களும் சீன பொருட்களை வாங்காமல் தவிர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China India Ladakh Clash Opportunities 4 Jan 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->