புற்றுநோய் மருத்துவர் சாந்தா மறைவு - மருத்துவர் இராமதாஸ் இரங்கல்..! - Seithipunal
Seithipunal


புற்றுநோய் மருத்துவர் சாந்தா மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "  சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் வி.சாந்தா உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழ்நாட்டில் புற்றுநோய் மருத்துவம் என்றாலே நினைவுக்கு வந்தவர் மருத்துவர் சாந்தா அவர்கள் தான். புகழ்பெற்ற, நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. இராமன் குடும்பத்தில் பிறந்த மருத்துவர் வி. சாந்தா அவர்கள் மருத்துவப் படிப்பை முடித்தவுடன், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சென்னை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நல்ல ஊதியத்தில் வேலை கிடைத்த போதிலும், அதை ஏற்க மறுத்து தொடக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஊதியமே இல்லாமலும், அதன்பின்னர் மிகக் குறைந்த ஊதியத்திலும்அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

இரு மருத்துவர்கள், 12 படுக்கைகளுடன் மிகச்சாதாரணமான அமைப்பாகத் தொடங்கப்பட்ட புற்றுநோய் மருத்துவமனையை உலகப்புகழ் பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமாக மாற்றிய பெருமை மருத்துவர் சாந்தாவையே சேரும்.

மருத்துவ சேவைக்காக பல்வேறு விருதுகளை வென்றவர். கடைசி வரை எளிமையாக வாழ்ந்தவர். புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவரது மறைவு புற்றுநோய் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கு பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், புற்றுநோய் நிறுவன அங்கத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Adayar Cancer Institute Hospital Deen Death Dr Ramadoss Regret


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->