புவியை விட்டு வெளியேறியதா சந்திரயான்-2..!! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலையில் பூமியை விட்டு வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய தொடங்கியது. பூமி வட்டப்பாதையை விட்டு வெளியேறியது  சந்திரயான்-2 .இன்று நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்-2.

பெங்களூரு:

நிலவை பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை உடைய சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு சேர்த்தது. 

அப்போது ராக்கெட்டிலிருந்து  பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகாமையில் குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவில், மற்றும் அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றியே வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை உயிர்த்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. 

இவ்வாறு சந்திரயான்-2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை உயர்த்தி பூமியைவிட்டு படி படியாக  நகர்ந்து தொலைவில் சென்ற நிலையில், இன்று அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாறியது.

சந்திரயான்-2 பயணம்

இதற்காக சந்திரயானில் உள்ள திரவ எஞ்சின் 1203 நொடிகள் இயக்கப்பட்டது. இதையடுத்து பூமியின் சுற்றுவட்டப் பாதையைவிட்டு சந்திராயன்-2 வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டது. பின்னர் வெற்றிகரமாக நிலவை நோக்கி  திசை மாற்றப்பட்டது. 

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திரயான்-2, இன்னும் 6 நாட்களில் (ஆகஸ்ட் 20-ம் தேதி) நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடையும். அதன்பின் அதன் வேகம் படி படியாக குறைக்கப்பட்டு செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrayan-2 is slow to reach moon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->