உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சந்திராயன் 2..! மகிழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியாது சந்திரயான் 2. இந்த திட்டத்தின் முக்கிய நிகழ்வில் ஒன்றான, 'விக்ரம் லேண்டர்' தரையிறங்கும் நேரத்தில் 2.1 கி.மீ தொலைவில் இருக்கும் போது தகவல் தொடர்பை இழந்தது. 

அதன் பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் வேகமாக சென்று லேண்டர் நிலவின் தரையில் மோதியது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள்.

மேலும், விக்ரம் லேண்டர் தரையிறக்கம் தோல்வியடைந்தாது என்றாலும், நிலவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஆர்பிட்டர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வந்தது.

இதை தொடர்ந்து, இந்நிலையில், நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயுவின் மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டரில் உள்ள சேஸ் 2 என்னும் கருவி ஆய்வு மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.. 

ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடிய இந்த வாயு பூமியில் மிக அரிதாகவே காணப்படும் ஒன்றாகும். தற்போது இந்த வாயு நிலவின் புறக்காற்று மண்டலத்தில் இருப்பதை ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chandrayan 2 Discovery acheviment


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->