மதங்களை குறிவைத்து பரப்பப்படும் வதந்தி! எச்சரிக்கை விடுத்த ஜக்கி வாசுதேவ்!!  - Seithipunal
Seithipunal


உலக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த வைரஸை தடுப் பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குறிப்பிட்ட இரண்டு மதங்களைக் குறித்து சில தினங்களாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பகிரப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தமிழக அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுபோல் வதந்திகள் பரப்புபவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது, இது குறித்து ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை இந்த கரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இதனை மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். ஆனால் சமூக வலைத்தளங்களில் சிலர் பொறுப்பற்ற நிலையில் பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

மேலும் குறிப்பிட்ட சில மதங்களை சார்ந்து அவர் மூலமாகத்தான் இந்த வைரஸ் பரவுகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இந்த செயல் மிகவும் தவறானது கரூரில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது தவறான வதந்திகளை பரப்பி வருவது மக்களை குழப்பமடையச் செய்யும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chakki Vasudev about rumours on social media about coronavirus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->