இரயில் சேவைகள் அதிரடியாக நிறுத்தம்?.. மாநில அரசுகள் கோரிக்கை?.. இரயில்வே வாரிய தலைவர் பதில்.! - Seithipunal
Seithipunal


இந்திய இரயில்வே வாரிய தலைவர் சுனித் சர்மா டெல்லியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஐ.ஆர்.சி.டி.சி பயணசீட்டு முன்பதிவு தளத்தில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. கொரோனா பாதிப்புள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்லும் தேவை ஏற்பட்டால், அவர்கள் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்துகொள்ளலாம் அல்லது கொரோனா இல்லை என்ற சான்றிதழை எடுத்து செல்லலாம். 

எந்த மாநில அரசும் இரயில் சேவையை நிறுத்துமாறு தற்போது வரை கூறவில்லை. மாநில அரசுகள் இரயில் சேவை குறித்து கூறவில்லை என்றாலும், மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து பல மாநில அதிகாரிகள் எங்களோடு ஆலோசனை மேற்கொண்டார்கள். 

இரயில் பயணிகளுக்கு வெப்ப பரிசோதனையை இரயில்வே நடத்தி வருகிறது. கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்க தவறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஷர்மிக் சிறப்பு இரயில்கள் இனி விட வாய்ப்புகள் இல்லை. தேவைக்கு ஏற்றாற்போல கோரிக்கை வைக்கப்பட்டால் மட்டுமே ஷர்மிக் இரயில்கள் இயக்கப்படும். (ஷர்மிக் இரயில்கள் என்பது கடந்த வருடத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை சொந்த ஊர்களுக்கு அல்லது மாநிலத்திற்கு கொண்டு செல்ல உதவியது).

இரயில் நிலையத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க பல இரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 4 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட இரயில் பேட்டிகள் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தூர்பாரில் இருந்து 100 க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்படும் பெட்டிகள் கேட்டு கோரிக்கை வந்துள்ளது. இவற்றில் முதற்கட்டமாக 20 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chairman and Chief Executive Officer Suneet Sharma Talks about Railway Corona Function 17 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->