இலாபத்திற்காக இந்தியாவை டீலில் விட்ட நட்பூ நாடுகள்?.. பெட்ரோல், டீசல் விலைகள் காரணம் இதோ.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " கச்சா எண்ணெயை உற்பத்தி செய்யும் நாடுகளிடம் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அழுத்தம் கொடுத்து வருகிறது. 

ரஷ்யா, கத்தார், குவைத் போன்ற நட்பு நாடுகளிடம் பெட்ரோல் உற்பத்தி அதிகரிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் உற்பத்தி அதிகரித்ததும் எரிபொருள் விலை வெகுவாக குறையும். கொரோனா பரவல் காரணமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களின் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது.

அவர்களின் இலாபத்தை கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்துள்ளது. உற்பத்தி வரும் நாட்களில் அதிகமாகும் பட்சத்தில் விலை வெகுவாக குறையும். சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை ஏப்ரல் மாதத்திற்குள் குறையலாம் " என்று தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Petroleum Minister Dharmendra Pradhan Pressmeet about Petrol Price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->