தமிழகம் உட்பட 9 மாநிலங்களுக்கு மத்திய குழு விரைவு.. டெங்கு பாதிப்பு எதிரொலி.! - Seithipunal
Seithipunal


9 மாநிலங்களுக்கு மத்திய அரசு மத்திய சுகாதார குழுவை டெங்கு குறித்து ஆய்வு செய்து, ஆலோசனை வழங்க அனுப்பி வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் அலைபரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, பல மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. 

இதனால், டெங்கு காய்ச்சலை கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ள தமிழகம், கேரளா, ஹரியானா, பஞ்சாப், இராஜஸ்தான், உத்திர பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட சுகாதார குழுவை அனுப்பியுள்ளது. 

இந்த குழு 9 மாநிலத்திலும் டெங்கு பாதிப்பை ஆய்வு செய்து, அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை மற்றும் சிகிச்சை ஆலோசனை குறித்து தகவலை வழங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Sent Medical Expert Team for Including Tamilnadu 9 Other States about Dengue Fever Spread Issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->