தமிழ் மொழியில் வெளியானது புதிய கல்விக்கொள்கை ஆவணம் - எதிர்ப்பிற்கு பின்னர் மத்திய அரசு வெளியீடு.! - Seithipunal
Seithipunal


புதிய கல்விக்கொள்கை குறித்த ஆவணம் மலையாளம், கன்னடம், குஜராத்தி உட்பட 17 மொழிகளில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த கல்விக்கொள்கை ஆவணம் தமிழ் மொழியில் வெளியிடப்படாமல், அதனை தவிர்த்து உள்ள 17 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், முன்னதாகவே மத்திய ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டது. தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை ஆவணம் வெளியிடப்படாத காரணத்தால் தமிழ் ஆர்வலர்கள், தமிழக அரசியல் கட்சிகள் என பலதரப்பு தங்களின் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

இந்நிலையில், இன்று மத்திய அரசு தமிழ் மொழியில் உள்ள புதிய கல்விக்கொள்கை ஆவணத்தை வெளியிட்டு இருக்கிறது. பல எதிர்ப்புகள் மற்றும் எச்சரிக்கைக்கு பின்னர் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தமிழ் மொழியில் புதிய கல்விக்கொள்கை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Release Tamil Language Education Policy 26 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->