#BigBreaking: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு.. மத்திய அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.10 க்கும் குறைகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை காரணம் காண்பித்து பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் பெற்றுள்ள நிலையில், மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. 

சில மாநில அரசுகள் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்து அறிவித்த நிலையில், சில மாநிலங்களில் அவை குறைக்கப்படவில்லை. இதனால் அம்மாநில எதிர்க்கட்சிகள் மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர் கோரிக்கை வைத்து வந்தன.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் லிட்டர் ரூ.106.66 ஆக விற்கப்படும் நிலையில், ரூ.5 குறைக்கப்படுகிறது. இந்த உத்தரவுகள் நாளை முதல் அமல்படுத்தப்படுகிறது. 

டீசல் லிட்டர் ரூ.102.59 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், டீசல் விலை ரூ.10 குறைக்கப்படுகிறது. தீபஒளி பண்டிகை சலுகையாக மத்திய அரசு இவ்வறிப்பை வெளியிட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Reduce Tax Petrol Diesel Price 3 Nov 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->