தேசிய கல்வி கொள்கை விவகாரத்தால்., இறுதி வடிவமைப்பை கொடுத்த மத்திய அரசு..!! - Seithipunal
Seithipunal


கஸ்தூரி ரங்கையன் தலைமையிலான குழு புதிய தேசிய கல்வி கொள்கை ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையிடம் ஒப்படைத்து உள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கு பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தது. எனவே இந்த கொள்கையை அமல்படுத்தும் வகையில் விரைவில் 6 வழிகாட்டுதல்களுடன் புதிய வரைவு கொள்கையை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி இருப்பதாக தெறிகிறது. 

இந்த இறுதி வரைவு கொள்கை மத்திய மந்திரிசபையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய வரைவு தேசிய கல்வி கொள்கையில் தெரிவிப்பது என்னவென்றால்:- எந்த ஒரு கொள்கையை எடுத்து கொண்டாலும் அதை அமல்படுத்தும்போது தான் அதன் சிறப்பு தெரியும். இது போல அமல்படுத்துதலுக்கு பலகட்ட முயற்சிகளும்., நடவடிக்கைகளும் நிச்சயம் தேவைப்படும்.

மேலும்., இந்த கொள்கையை பல்வேறு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் முறையான வழியில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் கொள்கைக்கான வெற்றியை சிறப்பாக பெற முடியும். கொள்கையை அமல்படுத்தும் பொது இருக்கின்ற உற்சாகம் மற்றும் கொள்கையின் நோக்கம் மிக தீவிரமான பிரச்சினை. கொள்கையில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான விளக்கங்கள்., கொள்கையின் நோக்கம் மற்றும் உற்சாகம் மிக முக்கிய கருத்தாகவே அமைய கூடும்.

இதை தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக கொள்கையை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் ஒவ்வொரு கட்டமாக இருக்க வேண்டியது அவசியம். அமைக்க பெற்றுள்ள கொள்கையின் தனி தனி அம்சத்துக்கும் பலகட்டங்கள் இருக்கிறது. அந்த தனி தனி அம்சத்துக்கும் ஒவ்வொரு கட்டமாக வெற்றிகரமாக அமல்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக., கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள திட்டங்களுக்கு உகந்த வரிசைமுறையை உறுதி செய்வதில் முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். மேலும்., திட்டங்களுக்கான அவசர நடவடிக்கைகளை முதலில் எடுக்க வேண்டும். இதன்மூலம் ஒரு வலுவான தளத்தை அமைக்க இயலும். மத்திய மற்றும் மாநில அளவிலுள்ள மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு., நிதித்துறை ஆகியவை ஒரே சமயத்தில் செயலாற்றுவது முக்கியமாகும். 

இதுமட்டுமல்லாது பலத்தப்பட்ட இணை அமலாக்க நடவடிக்கைக்கும் தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளவும்., மதிப்பிடவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் பெரிய அளவிலான மாற்றங்கள் அல்லது மெருகூட்டுவது போன்றவை செய்யப்பட்டு., வரும் 2030 ஆம் வருடத்தின் போது இக்கொள்கையை அமல்படுத்த மதிப்பீடு தொடர்பான விபரம் கூட்டாக ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt plan to national education scheme


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->