2 வருடங்களில் 4,132 வீரர்கள் மரணம்.. மத்திய அரசு பகீர் தகவல்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த 2017 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரையிலான 3 வருடங்களில் 4,132 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கையில் உயிரிழந்ததாக உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுந்த நிலையில், இது தொடர்பாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரை, சுமார் 4,132 பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் இருக்கையில் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் 1,597 பேரும், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 725 பேரும், மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் 671 பேரும், இந்தோ - திபெத்திய காவல் படையினர் 429 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக மத்திய ஆயுதப்படை பிரிவை சார்ந்த 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதில் எல்லை பாதுகாப்பு படையினர் 23 பேரும், ரிசர்வ் காவல் படையை சார்ந்த 35 பேரும், தொழிற்துறை பாதுகாப்பு படையை சார்ந்த 24 பேரும், இந்தோ திபெத் காவல் படையை சார்ந்த 7 பேரும், சசாஸ்த்ர சீமா பல் மற்றும் அசாம் ரைபிள் படையை சார்ந்த தலா 5 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt Home Affairs Ministry Tells about Jawan Passed away Last Two year


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->