வீட்டில் இருக்கும் போதும் முகக்கவசம் கட்டாயம் - மத்திய நிதி ஆயோக் சுகாதாரத்துறை..! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில், மத்திய அரசின் நிதி ஆயோக் சுகாதாரத்துறை உறுப்பினர் மருத்துவர் வி.கே. பால், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களை சந்தித்தனர். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " நாம் வீடுகளை விட்டு வெளியே செல்லும் சமயத்தில் முகக்கவசம் அணிந்து சென்று வருகிறோம். ஆனால், தற்போது கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டில் மக்கள் இருக்கும் போதும் முகக்கவசம் அணிந்துகொள்வது நல்லது.

வீட்டில் இருக்கையில் முகக்கவசம் அணிவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால், மற்றொருவருக்கு பாதிக்கப்படுவதை தடுக்கும். கடந்த ஊரடங்கை போலவே மக்கள் வீட்டில் இருக்கும் போதும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வசதி இல்லாத பட்சத்தில், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும். 

அவசியம் இல்லாமல் மக்கள் வீட்டினை விட்டு வெளியே செல்ல கூடாது. உறவினர்களை இனி வரும் காலங்களில் அதிகளவு வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட கூடாது. கொரோனா தொடர்பாக பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Health Ministry Awareness About Corona Face Mask at Home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->