கொரோனா எதிரொலி... கட்டுப்பாடுகளை அறிவித்த மத்திய அரசு.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய மத்திய அரசு இது தொடர்பாக 15 அம்ச கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 

இதன்படி, இந்தியாவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனம் மூடப்படும். உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம் மூடப்படும். மாணவர்கள் வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும். 

தேர்வுகள் அனைத்தையும் காவ்லி நிறுவனங்கள் ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும் கட்டாயத்தில் இணையதள தேர்வு நடத்தலாம். தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிசெய்ய வேண்டும்.  

பெரியளவிலான நிறுவன ஆலோசனை கூட்டம் காணொளிகள் மூலமாக நடைபெற வேண்டும். முன்னதாக திட்டமிட்ட திருமணங்கள் நடத்த அனுமதி உண்டு. புதிய நிகழ்ச்சிகள் நடத்த கூடாது. 

உணவகங்கள் மற்றும் விடுதியில் தேவையான சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைகழுவ கூடுத வசதி ஏற்படுத்த வேண்டும். உள்ளூர் விளையாட்டுப்போட்டிகளை ஒத்திவைத்து அறிவிக்க வேண்டும். 

ஆன்மீக நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது கூடாது. ஒருவருக்கொருவர் கைகுலுக்குவதை தவிர்க்க வேண்டும். மக்கள் தேவையில்லாத பயணத்தை தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர் கைகுலுக்க கூடாது. 

சந்தையில் நெருக்கங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனையில் கொரோனா விழிப்புணர்வு கட்டாயம் இருக்க வேண்டும். மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பாசப்பிணைப்பு கட்டியணைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வந்தந்தியை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt advise about corona virus


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->