100 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கடன் நிலுவை! அதிர வைக்கும் ரிப்போர்ட்!  - Seithipunal
Seithipunal


வரலாற்றில் முதன் முறையாக மத்திய அரசின் கடன் நிலுவை தொகை 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதனை நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, மத்திய அரசின் கடன் நிலுவை தொகை படிப்படியாக உயர்ந்து வந்திருக்கிறது. அது முதல் காலாண்டில் சரசரவென ஏழு லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த கொரோனா சூழலினால் அதிக அளவு மத்திய அரசு கடன் வாங்கியுள்ளது. அதன் காரணமாகவே மொத்த கடன் அளவு 100 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஐ எம் எஃப் தரவுகளின் படி தற்போதைய மொத்த கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 சதவீதமாக உள்ளது.

இது வரும் 2021 நிதி ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை தொடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2017ஆம் ஆண்டில் பொதுக்கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்று, நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் வேளாண்மை விதிகள் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central govt 100 lakh crore loan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->